பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் யூடியூபரான சவுக்கு சங்கர் கைது
தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய Youtuber சவுக்கு சங்கர் மீது புதுமந்து காவல் நிலைய ஆய்வாளர் அல்லிராணி சைபர் கிரைம் குற்ற பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் இன்று உதகையில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி தமிழினியன் முன்னிலையில் சவுக்கு சங்கர் ஆஜராகினார்.
நாளை மாலை வரை 24 மணி நேரம் போலீஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிபதி அனுமதி அளித்து உத்தரவு…
பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் யூடியூபரான சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘சவுக்கு’ என்ற இணையதளத்தை நடத்தி வந்ததன் மூலம் அறியப்பட்ட ஏ. சங்கர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், தமிழக காவல்துறையில் உள்ள பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்தார்.
இந்நிலையில் காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய Youtuber சவுக்கு சங்கர் மீது உதகை புதுமந்து காவல் நிலைய ஆய்வாளர் அல்லிராணி சைபர் கிரைம் குற்ற பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் இன்று காவல்துறையினர் உதகையில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி தமிழினியன் முன்னிலையில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி தமிழினியனிடம் காவல்துறையினர் போலீஸ்காவளியில் வைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டதை அடுத்து நாளை மாலை வரை 24 மணி நேரம் ஒரு நாள் போலீஸ் காவலரின் வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளார்.
மேலும் இந்த 24 மணி நேரத்தில் 4 மணி நேரத்துக்கு ஒரு முறை அவரின் வழக்கறிஞர்கள் அவரைக் கண்டு உரையாடலாம் எனவும் தீர்ப்பளித்தார்.