பேரணாம்பட்டில் முஸ்லிம் பெண் ஜாயிதாவூக்குச் சொந்தமான இடத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்து திமுக பிரமுகர் அராஜகம்!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு குப்பைமேடு தரைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜாயிதா. இவருக்கு கடந்த 2001 ஆம் வருடம் பேரணாம்பட்டு ஜெயலலிதா நகர் அருகில் அமைச்சர் துரைமுருகனால் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஜாயிதாவின் கணவருக்கு உடல் நலம் குன்றியதால் ஜாயிதாவால் தமிழக அரசு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டாவில் வீடு கட்ட முடியாமல் தவித்தார்.
இந்நிலையில் தனக்கு பணம் தேவைப்பட்டதால் தற்போதைய 3வது வார்டு நகர மன்ற உறுப்பினராக உள்ள ஜானகியின் கணவரான திமுக பிரமுகர் வில்லியம் பீட்டர் என்பவரிடம் 2000 ரூபாய்க்கு அந்த இடத்தை அடமானமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் ஜாயிதா ஒரு படிக்காதவர் என்பதை தெரிந்து கொண்ட வில்லியம் பீட்டர், ஜாயிதா அடமானம் வைத்த வீட்டுமனை பட்டாவை ஏதேதோ தில்லுமுல்லு வேலைகள் செய்து அதே பகுதியைச் சேர்ந்த ஹசேன் என்பவரது மகன் ஜமீலுக்கு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து படிக்க தெரியாத அப்பாவியான ஜாயிதா வில்லியம் பீட்டரிடம் சென்று தான் அடமானம் வைத்த வீட்டு மனையை தான் வாங்கிய பணத்தை கொடுத்துவிட்டு கேட்டுள்ளார்.
அதற்கு வில்லியம் பீட்டர் ஒரிஜினல் பட்டாவை வைத்துக் கொண்டு போலியான ஒரு பட்டாவை தயார் செய்து அதை ஜாயிதாவிற்கு வழங்கியுள்ளார்.
இதுகுறித்து ஜாயிதா கடந்த 12. 2. 2025 அன்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். 30 .6. 2025 அன்று பேரணாம்பட்டு காவல் நிலையத்திலும் புகார் மனுவை அளித்துள்ளார்.
வில்லியம் பீட்டர் திமுகவைச் சேர்ந்தவர் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தயங்குகின்றனர்.

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் எடுத்துக்கூறி,
ஏழை விதவைப் பெண்ணான ஜாயிதாவுக்குச் சேர வேண்டிய வீட்டுமனை பட்டாவை பெற்றுத் தர வேண்டும் என்பதே ஜாயிதா குடும்பத்தினரின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜாயிதாவுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய வீட்டுமனை முறைப்படி கிடைக்குமா ?அல்லது கிடைக்காமல் போகுமா ?என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்.
செய்தி ஆசிரியர் ச.வாசுதேவன்
