பேரணாம்பட்டு தாலுக்கா அலுவகத்தில் நில மேம்பாட்டு திட்ட பதிவு சிறப்பு முகாம், மாவட்ட வருவாய் ஆய்வாளர் மாலதி பங்கேற்பு|
பேரணாம்பட்டு தாலுக்கா அலுவகத்தில் நில உடமை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிலம் சம்பந்தமான பதிவு திருத்தம் குறித்து சிறப்பு முகாம் நடந்தது வேலூர் மாவட்ட வருவாய் அதிகாரி மாலதி தலைமை தாங்கி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரிந்துரைக்கப்பட்டிருந்த மனுதரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களிடம் விசாரணை நடத்தினார். பேரணாம்பட்டு தாலுக்காவில் நடந்த ஜமாபந்தியில் பெறப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றம் குறித்த மனுக்கள் குறித்தும் ஆய்வு நடத்தினார். நிகழ்ச்சியில் பேரணாம்பட்டு தாசில்தார் விநாயகமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரர் கலைவாணி, வட்ட வழங்கல் அலுவலர் சரவணன், நில அளவையர் சரவணன், வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர்கள் எம். உதயாகுமார், சிவப்பிரகாசம், எம். சௌந்தரி, அன்பரசன், துரைமுருகன், ஜெயசங்கர், நவீன்குமார், கிராம உதவியாளர்கள் வெங்கடேசபாபு, கமலாபுரம் சுரேஷ்குமார், குப்புசாமி, அனிதா, கே. சுந்தரேசன், ஆர். பாஸ்கர், எம். அறிவழகன், திவ்யா, ராஜேஸ்வரி, சின்னசாமி உட்பட மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.