பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் அண்ணாவின் உருவ சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி செய்தியாளர் அசிவராமலிங்கம்.
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அருகே உள்ள அண்ணாவின் முழு உருவ சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் அண்ணாவின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி, நகரச் செயலாளர் விஜய பாண்டியன், நகரத் துணைச் செயலாளர் மாதவராஜ்,
நகரப் பொருளாளர் ஆரோக்கியராஜ், நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பக மூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார்,அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் நீலகண்டன், அம்மா பேரவை நகர செயலாளர் ஆபரம் அய்யாதுரை,
வார்டு செயலாளர்கள் ரவிச்சந்திரன், மகேஷ் பாலா, கனிராஜ், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள்,கழுகுமலை நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமி ராஜ், கிளைச் செயலாளர் முத்துசாமி,மகளிர் அணி ஜெயந்தி, மற்றும் அதிமுக நிர்வாகிகள் மனோகரன், ராமமூர்த்தி,கோபி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.