பேர்ணாம்பட்டு அடுத்த சாத்கர் மலை பகுதியில் 1650 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்களை அழித்து மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை
வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இதனையடுத்து குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பேர்ணாம்பட்டு காவல் நிலைய போலீசார் இணைந்து வேலூர் மாவட்டம்
பேர்ணாம்பட்டு அடுத்த சாத்கர் மலை பகுதியில் உள்ள மாமரத்து பள்ளம் எனும் இடத்தில் சோதனை மேற்கொண்ட போது
ஆங்காங்கே கள்ளச்சாராயம் காய்ச்ச போடப்பட்டிருந்த சுமார் 1650 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் கண்டுபிடித்து அழித்தனர்.
மேலும் இது போன்ற குற்ற செயல்ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் எஸ்.பி. மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்