பொறியாளர் தேன்மொழி அறக்கட்டளையின் உடல் உறுப்புதான விழிப்புணர்வு முகாம் தஞ்சையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை சாலை ரோட்டரி சங்க கட்டிடத்தில் பொறியாளர் தேன்மொழி அறக்கட்டளை சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தலைமையில் நடைப்பெற்றது.
திருவையாறு அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரும்,, பொறியாளர் தேன்மொழி அறக்கட்டளை நிறுவனரும், தேன்மொழியின் இணையருமான மருத்துவர் ஏ.எஸ்.லோகநாதன் வரவேற்புரையாற்றினார்.
தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனை மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுனரும், மருத்துவமனை கண்காணிப்பாளருமான பேராசிரியர் மருத்துவர் சி.இராமசாமி, தமிழ்நாடு அரசு மருத்துவமனை சங்க மாவட்ட தலைவரும், மருத்துவம் மற்றும் குடும்ப நலம் நலபணிகள் துணை இயக்குநர் அன்பழகன், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அலுவலர் செல்வம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நியூட்டன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர்,
மருத்துவக்கல்லூரி நோடல் அலுவலர் மருத்துவர் லியோ உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு உரையாற்றினார்.