BREAKING NEWS

போடிநாயக்கனூரில் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

கள்ளழகர் திருக்கோலத்தில் அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் குதிரை வாகனத்தில் தங்க நிற பட்டு உடுத்தி சாற்றி போடிநாயக்கனூரில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கொட்டகுடி ஆற்றில் இறங்கினார்.

தமிழ் புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமை பிறந்ததால் சூரியனுக்கு உகந்த தங்க நிற பட்டுடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்.

கோவிந்தா நாராயண கோஷம் முழங்க கள்ளழகரை வழிபட்டனர் .

 

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரின் மையப்பகுதிகள் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவில்.

இவர் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த திருக்கோவில் ஜமீன்தார்களால் உருவாக்கப்பட்டு தற்போது இந்து அறநிலைத்துறை நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இன்று சித்ரா பௌர்ணமி முன்னிட்டு இந்தக் கோவிலில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் விமர்சையாக நடைபெற்றது.

அதிகாலையிலேயே சீனிவாச பெருமாளுக்குதங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

உற்சவமூர்த்தி கள்ளழகர் திருக்கோல த்தில் தங்க நிற முலாம் பூசுப்பட்ட குதிரையில் கோவிலில் இருந்து புறப்பட்டு சென்று சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொட்டகுடி ஆற்றில் தங்க நிற பட்டுடுத்தி இறங்கினார்.

ஏராளமான பக்தர்கள் குவிந்த கோவிந்தா நாராயணா என்று கோஷங்கள் முழங்கி சூரியனுக்கு உகந்த தங்க நிற பட்டு உடுத்தி கொட்டகுடி ஆற்றில் இறங்கிய அழகரை வழிபட்டனர்

பின்னர் அங்கிருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சாட்டையடித்து தீப்பந்தம் ஏந்தி ஆடி நேர்த்தி கடன் செலுத்தினர்.

CATEGORIES
TAGS