BREAKING NEWS

போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி பகுதிகளில் இல்லம் தேடி வாக்குப்பதிவு தொடங்கியது.

போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி பகுதிகளில் இல்லம் தேடி வாக்குப்பதிவு தொடங்கியது.

 

வாக்குச்சாவடிக்கு நேரில் வர இயலாத மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல் நல குறைபாடு உள்ளவர்கள் ஆகியோர்களிடம் அவர்கள் வீடுகளில் சென்று தபால் வாக்குகள் பெறப்பட்டது*

நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப் பதிவிற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் வாக்கு சாவடிக்கு வர இயலாத உடல்நல குறைபாடு உள்ளவர்கள் போன்றவர்களில் வீடுகளில் சென்று வாக்குப்பதிவு பெறுவதற்கான திட்டம் தேர்தல் ஆணையம் மூலம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது.
.

போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 234 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது இதில் மூத்த குடிமக்கள் 122 நபர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 112 நபர்கள் தபால் வாக்கிற்காக விண்ணப்பித்திருந்தார்கள்

போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் இல்லம் தேடி வாக்குப்பதிவு திட்டம் தொடங்கியது.

12 பிரிவுகளாக தேர்தல் பணியாளர்கள் பிரிக்கப்பட்டு விண்ணப்பம் செய்திருந்த மாற்றுத்திறனாளிகள், மூத்தகுடிமக்கள் இயலாதவர்கள் உடல் நல குறைபாடு உள்ளவர்களிடம் வீடுகளில் சென்றுதபால் வாக்குகள் பெறப்பட்டது

மூத்தகுடி மக்கள் மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை பதிவிட்டனர்.

CATEGORIES
TAGS