BREAKING NEWS

மகாதானபுரம் கிராமத்தில் புங்க மரத்தடியில் சமாதி அடைந்துள்ள சடையப்ப சித்தர் கோயில் மற்றும் ஓசைமணி காளியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.

மகாதானபுரம் கிராமத்தில் புங்க மரத்தடியில் சமாதி அடைந்துள்ள சடையப்ப சித்தர் கோயில் மற்றும் ஓசைமணி காளியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மூவலூர் மகாதானபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஓசைமணி காளியம்மன் கோயில் உள்ளது.

 

 

இக்கோயிலின் மணியை ஒலித்து வேண்டுதல்கள் வைப்போருக்கு உடனடியாக நிறைவேறும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இந்த கோயிலில் உள்ள புங்க மரத்தடியில் சடையப்பர் என்ற சித்தர் சமாதி அமைந்துள்ளது.

 

சடையப்ப சித்தர் சமாதி அடைந்ததால் இந்தப் புங்கமரம் வேறு எங்கும் இல்லாதவகையில் விழுதுகளுடன் அமைந்துள்ளது சிறப்புக்குரியதாகும். இக்கோயிலில் கடைசியாக 2009 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 

 

தற்போது 14 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் திருப்பணி செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

 

CATEGORIES
TAGS