மகாதேவ மலையில் ஆடி கிருத்திகை முன்னிட்டு திரளான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்
கே.வி.குப்பம் அடுத்த மகாதேவ மலையில் ஆடி கிருத்திகை முன்னிட்டு திரளான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம் காமாட்சி அம்மன் உடனுறை மகாதேவமலை சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், காமாட்சியம்மன் சமேத மகாதேவ சுவாமி, தட்சிணாமூர்த்தி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை அபிஷேகம் ஆராதனையை ஸ்ரீலஸ்ரீ மகானந்த சித்தர் நடத்தி வைத்தார்
வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் காவடி எடுத்து வந்து மொட்டை அடித்து காது குத்தி தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினார் இதனைத் தொடர்ந்து புஷ்ப பல்லக்கு விழா நடந்தது.
மேலும் பொதுமக்கள் வசதிக்காக மகாதேவமலை – குடியாத்தம், மகாதேவமலை- பள்ளிகொண்டா, மகாதேவமலை – பரதராமி ஆகிய ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்ல இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் ஸ்ரீலஸ்ரீ மகானந்த சித்தர் ஆசியினை வழங்கினார்