BREAKING NEWS

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கர்நாடகா வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைய முயன்ற குதிரைகளுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் திருப்பி அனுப்பி வைப்பு. ஓசூர் கால்நடை மருத்துவ குழுவினர் நடவடிக்கை.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கர்நாடகா வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைய முயன்ற குதிரைகளுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் திருப்பி அனுப்பி வைப்பு. ஓசூர் கால்நடை மருத்துவ குழுவினர் நடவடிக்கை.

அண்மையில் அண்டை மாநிலங்களான கேரளா கர்நாடகா ஆகிய பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவி வருவதாக வந்த தகவலின் பேரில் தமிழ்நாடு மாநில எல்லைப் பகுதியில் கால்நடை துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கர்நாடக மாநிலத்தில் குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு நோய்கள் தாக்கியுள்ளதாகவும் இதன் தாக்கம் மனிதர்களையும் பாதிப்பிற்கு உள்ளாகும் என்பதாலும் கால்நடை மருத்துவ குழுவினர் மாநில எல்லையில் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மகாராஷ்டிரா மாநிலத்தின் பதிவு கொண்ட கால்நடைகளுக்கான பிரத்தியேக ஆம்புலன்ஸ் வாகனம் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் வழியாக தமிழக எல்லை நோக்கி வந்தது.

இதனை தடுத்து நிறுத்திய கால்நடை மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸ் வாகனத்தை சோதனையிட்டனர். அப்போது அந்த வாகனத்தில் 5 குதிரை கன்றுகளுடன் ஒரு குதிரை இருப்பது தெரியவந்தது.

உடனே குதிரைகளுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை கால்நடை மருத்துவர் குழு அதிகாரிகள் மீண்டும் கர்நாடக மாநிலத்திற்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.

இந்த ஆம்புலன்ஸ் வாகனம் தமிழ்நாட்டு எல்லையை கடந்து கர்நாடக மாநில பகுதிக்குள் செல்லும் வரை, பின் தொடர்ந்து உடன் சென்ற மருத்துவக் குழுவினர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதை உறுதி செய்தனர்.

CATEGORIES
TAGS