மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம்
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த மூன்று சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார்கள்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் அவர்கள் மக்களவைத் தேர்தல் – 2024 முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 100% வாக்களிப்பது அவசியம் குறித்த மூன்று சக்கர வாகன (ஸ்கூட்டர்) தேர்தல் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்,
இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக காமராஜர் சிலை வரை நடைபெற்ற.
இந்த விழிப்புணர்வு பேரணியில் பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிப்போம், எனது வாக்கு எனது எதிர்காலம், வாக்களிப்பதில் பெருமை கொள்வோம், இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம், எனது வாக்கு எனது உரிமை, தவறாமல் வாக்களிப்பது வாக்காளர் கடமை, நமது இலக்கு 100 % சதவீதம் வாக்குப்பதிவு, தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா, ஓட்டுக்கு வாங்க மாட்டோம் நோட்டு என்ற பதாகைகளை ஏந்தி பொது மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.