மக்களின் தாகத்தை நீக்கிய மருந்து நிறுவனம் ,மோர் அருந்தி தாகம் தணிந்து சென்ற பொதுமக்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருப்பதி மொத்த மருந்து விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் கோடை காலத்தில் மக்களின் தாகத்தை நீக்கும் வகையில் 15 நாட்கள் குறிப்பாக ஒவ்வொரு நாளும், மோர், சர்பத் உள்ளிட்ட பானங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர் மேலும் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவு என்பதால் அவ்வழியாகச் சென்ற மாணவர்கள்,பெற்றோர்கள், உள்ளிட்ட பலரும் தங்களின் தாகத்தை நீக்கி சென்று தங்களது பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை பார்க்கச் சென்றனர் அப்போது தாகத்தை நீக்கிய திருப்பதி மருந்து நிறுவனத்திற்கு நன்றியினை தெரிவித்தனர்.