மக்களுக்கு என்ன செய்தார் என்பதை என்னுடன் பொது மேடையில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் விவாதிக்க தயாரா என சவால்
மக்களுக்கு என்ன செய்தார் என்பதை என்னுடன் பொது மேடையில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் விவாதிக்க தயாரா என சவால்
மக்களுக்கு இதுவரை அவர் எதுவும் செய்யவில்லை
என பா.ம.க அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் பாலு காட்பாடியில் பேச்சு
மது ஆலை நடத்தக்கூடிய அதிபர் இந்த அரக்கோணம் தொகுதிக்கு வேண்டுமா மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தொடர்ந்து போராடக்கூடிய நீதிமன்றத்தின் மூலமாக போராடிய வழக்கறிஞர் வேண்டுமா.
பா.ம.க அரக்கோணம் வேட்பாளர் வழக்கறிஞர் பாலு காட்பாடியில் பேட்டி
வேலூர் மாவட்டம் காட்பாடி கரசமங்கலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வழக்குரைஞர் பாலு அறிமுக கூட்டமானது பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் இளவழகன் தலைமையில் நடந்தது இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பார்த்திபன் ஞானசேகர், ராஜா உள்ளிட்டோரும் பாமக மாவட்டதுணை தலைவர் சம்பத், மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாநில துணை தலைவர் என்.டி.சண்முகம், சமூகநீதி பேரவை செயலாளர் சக்கரவர்த்தி,வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் அ,ம.கிருஷ்ணன் உள்ளிட்டோரும் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பாலு உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு பேசுகையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் இதுவரையில் மக்களுக்கு எந்த ஒரு நன்மையையும் செய்யவில்லை நான் வெற்றி பெற்றால் நகரி திண்டிவனம் ரயில்பாதை பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன்,அரக்கோணத்தில் ரயில்கள் அனைத்தும் நின்று செல்லும் அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்துவேன் மக்களுக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுப்பேன் மக்களுக்கு ஜெகத்ரட்சகன் என்ன செய்தார் என்பதை என்னுடன் பொதுமேடையில் வாக்காளர்கள் முன்னிலையில் அவர் விவாதிக்க தயாரா என பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் பாலு கூறுகையில்
அரக்கோணம் தொகுதியில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மீண்டும் போட்டியிடக் கூடிய ஜெகத்ரட்சகன் அவர்கள் மீது கடுமையான அதிருப்தியில் மக்கள் இருக்கிறார்கள் அவரை ஐந்து ஆண்டுகளாக நாங்கள் பார்க்கவே இல்லை எங்கள் தொகுதி என்னுடைய பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசியதில்லை எங்களுடைய மக்கள் பிரதிநிதியாக அவர் எதுவும் செய்யவில்லை ஐந்தாண்டுகள் அவரை காண முடியவில்லை இப்படி போன்றவர் மீண்டும் எப்படி வாக்கு கேட்க வருவார் வந்தால் அவரை விரட்டி அடிப்போம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர் இந்த தருணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அரக்கோணம் நாடாளுமன்றத்தில் போட்டியிடுகிறேன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் எனக்கு சிறப்பாக ஒத்துழைப்பு தருகின்றனர்.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் நான் வெற்றி பெற்றால் இந்த பகுதியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கான பல்வேறு திட்டங்களை நான் இப்பொழுதே தயாரித்துக் கொண்டிருக்கிறேன் விரைவில் ஓரிரு நாட்களில் பத்திரிகையாளர்கள் முன்பாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அதன் மூலமாக இந்த தொகுதியின் உடைய முக்கிய பிரச்சினைகள் என்ன அதை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் எந்த திட்டங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் தெளிவான விளக்கத்தை நான் தர இருக்கிறேன்.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களிடம் ஒரே ஒரு கேள்வியை முன்வைக்கின்றேன் மது ஆலை நடத்தக்கூடிய அதிபர் இந்த அரக்கோணம் தொகுதிக்கு வேண்டுமா மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தொடர்ந்து போராடக்கூடிய நீதிமன்றத்தின் மூலமாக போராடி 90 ஆயிரம் மதுக்கடைகளை இந்தியா முழுவதும் மூடிய ஒரு வழக்கறிஞர் உங்களுக்கு வேண்டுமா என்ற கேள்வியை பகுதி மக்கள் முன்பாக வைக்கின்றேன் என கூறினார்.