மக்களுக்கு தடையின்றி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் – அமைச்சர் சக்கரபாணி தகவல்
ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் 2கோடியே 24லட்சம் மக்களுக்கு தடையின்றி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்
ரேஷன் பொருட்களை நேரடியாக விநியோகம் செய்ய ஒன்றிய அரசு வரிவிலக்கு அளித்தால், நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவெடுக்கும் என அமைச்சர் சக்கரபாணி தகவல்
78வது சுதந்திர தினத்தையொட்டி அம்பத்தூர் அடுத்த பாடி சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது..
இதில் சிறப்பு அழைப்பாளராக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.. இதனை தொடர்ந்து சமபந்தி விருந்தில் பொதுமக்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கி உணவுகளை பரிமாரி அவர்களுடன் உணவருந்தினார். அப்போது அமைச்சருடன் அமர்ந்து உணவருந்திய பெண் ஒருவர் சில மாதங்களாக ரேஷன் கடைகளில் பொருட்கள் சரிவர கிடைக்கவில்லை என கூறியதற்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்..