மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்: மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்பு!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சின்னதாமல் செருவு, மசிகம், பாலூர், கொத்தூர், மாச்சம்பட்டு ஆகிய ஐந்து ஊராட்சி மன்றங்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் பேரணாம்பட்டு சாலபேட்டையில் உள்ள விஜயலக்ஷ்மி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமை பேரணாம்பட்டு ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜெ. சித்ரா ஜெனார்தனன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச தொகுப்பு வீடு, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித் தொகை, சாதி சான்று, இருப்பிடச் சான்று, சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு மின் விளக்குகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். இந்த முகாமில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலக்ஷ்மி, வேளாண்மை ஆத்மா திட்ட தலைவர் கே.ஜெனார்தனன், ஒன்றிய ஆணையர் மு.கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர் சத்திய மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜே.ராஜமாணிக்கம், எஸ்.கோமதி சௌந்தரராஜன், எஸ்.கோதண்டன், டி.ஜெயந்தி தாமோதரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் எஸ்.ஜீவிதா செந்தில், மசிகம் எஸ்.மாலதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லக்ஷ்மி, சாந்தி மணிகண்டன், ஊராட்சி செயலாளர்கள் மாச்சம்பட்டு மாதவன், ஆர்.புருஷோத்தமன், சி.அனிதா, ஒன்றிய உறுப்பினர்கள் டி.எம்.டில்லிராஜா ,எம்.செந்தில் குமார் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.