BREAKING NEWS

மக்களை தேடி மருத்துவம் நான்காம் ஆண்டு தொடக்க விழா

 

 

 

மக்களை தேடி மருத்துவம் நான்காம் ஆண்டு தொடக்க விழா

பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் பங்கேற்பு

தங்கள் பகுதியில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர் பணியாளர்56 பேருக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக போகலூர் வட்டார மருத்துவர் கார்த்திக் செல்வம் பேட்டி

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களால் கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டமானது தொடங்கப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு நான்காவது ஆண்டு தொடக்க விழா மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் வழிகாட்டுதலின்படி சுகாதார பணியாளர்கள் நோயாளிகளின் இல்லங்களுக்கு சென்று தொற்றா நோயான நீரிழிவு,உயரத்த அழுத்தம், உள்ளிட்ட நோய்களை கண்டறிந்து மருந்து வழங்கி வருவதோடு வாதம்,மூட்டு வலி உள்ளிட்ட நாள்பட்ட வலிகளுக்கும் இயன் முறை சிகிச்சை அளித்து நோயாளிகளுக்கு ஆதரவாக இருந்து வரும் சுகாதார தன்னார்வல பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக நான்காம் ஆண்டு தொடக்க விழாவில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அவர்களைப் பாராட்டி கௌரவித்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் போகலூரில் சுற்று வட்டாரங்களில் சிறப்பாக செயல்பட்ட சுகாதார தன்னார்வலர் பணியாளர்களை கௌரவித்து பாராட்டு சான்றிதழ்களை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் வழங்கினார் அப்போது மேடையில் பேசிய பயனாளிகள் தங்களை இந்த தன்னார்வல சுகாதாரப் பணியாளர்கள் தாயைப் போல அரவணைத்து பார்த்துக் கொண்டதாக தெரிவித்தனர்
தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய போகலூர் வட்டார மருத்துவர் கார்த்திக் செல்வம் தங்கள் பகுதிகளில் சிறப்பாக செயல்பட்ட 56 பேருக்கு சான்றிதழ் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்

CATEGORIES
TAGS