மண்புழு உரம் தயார் செய்யும் முறையையும் மற்றும் மண்புழு உரத்தின் நன்மைகளையும் செயல்முறை மூலம் விளக்கிக் கூறினர் ஜே.கே.கே.முனிராஜா.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கணக்கம்பாளையத்தில் ஜே.கே.கே.முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூரியில் பயிலும் 4-ம் ஆண்டு இளநிலை வேளாண் அறிவியல் மாணவர்கள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சியின் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயார் செய்யும் முறையையும் மற்றும் மண்புழு உரத்தின் நன்மைகளையும் செயல்முறை மூலம் விளக்கிக் கூறினர்.
ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர், அந்த வகையில் விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், விவசாயம் செய்வதன் மூலம் அதிக மகசூல் பெறுவதன் அவசியம் குறித்தும் விவசாயிகளிடம் வேளாண்மை துறை மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்
அந்த வகையில் இன்று கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கணக்கம்பாளையத்தில் பகுதியில் ஜே.கே.கே.முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூரியில் பயிலும் 4-ம் ஆண்டு இளநிலை வேளாண் அறிவியல் மாணவர்கள் அப்பகுதி விவசாயிகளுக்கு இயற்கை முறையில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ஜீவாமிர்தம் மற்றும் அமிர்த கரைசல் தயாரிக்கும் முறையையும் அதை பயன்படுத்தும் முறையையும் செயல்முறை திட்டம் மூலம் விவசாயிகளுக்கு விளக்கினார்
தொடர்ந்து விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயார் செய்யும் முறையையும் மண்புழு உரத்தின் நன்மைகளையும் செயல்முறை மூலமாக விளக்கி கூறினர்