BREAKING NEWS

மதுரவாயலில் போலீஸ்காரர் தாக்கியதில் கார் டிரைவர் பலியான சம்பவத்தில் தலைமை காவலர் அதிரடி கைது.

மதுரவாயலில் போலீஸ்காரர் தாக்கியதில் கார் டிரைவர் பலியான சம்பவத்தில் தலைமை காவலர் அதிரடி கைது.

மதுரவாயலில் போலீஸ்காரர் தாக்கியதில் கார் டிரைவர் பலியான சம்பவத்தில் தலைமை காவலர் அதிரடி கைது

உடன் இருந்த பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை

ஜெய் பீம் படம் பட பானியில் சம்பவத்தை மூடி மறைக்க நாடகம் ஆடியது அம்பலம்

சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் 39 கால் டாக்ஸி டிரைவர் ஆன இவர் நேற்று முன்தினம் இரவு தாம்பரம் மதுரவாயில் பைபாஸ் வானகரம் சர்வீஸ் சாலையில் காரை நிறுத்திவிட்டு காருக்குள் ஒரு பெண்ணுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

 

அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த மதுரவாயல் தலைமை காவலர் ரிஸ்வான் காரின் அருகே சென்று காரில் இருந்து வெளியே வரும்படி ராஜ்குமாரிடம் பேசியுள்ளார் அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த ரிஸ்வான் ராஜ்குமாரை சரமாரியாக தாக்கியதில் வலிப்பு ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்தார்.

 

இதையடுத்து உடன் இருந்த பெண் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் ரோந்து பணியில் இருந்த மதுரவாயல் போலீஸ் காரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆம்புலன்ஸ் மூலமாக ராஜ்குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவர் இறந்து போனார்.

 

இதையடுத்து தான் தாக்கியதால் ராஜ்குமார் இறந்து போனது தெரிந்து விடுமோ என அந்த பெண்ணை அங்கிருந்து போலீஸ்காரர் மிரட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் ராஜ்குமார் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த தலைமை காவலர் ரிஸ்வான் மற்றும் மற்ற போலீஸ்காரிடமும் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

 

சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஏதும் இல்லாததால் ராஜ்குமாரை தான் தாக்கவில்லை எனவும் மயங்கி கிடந்தவரை தான் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக கூறிக்கொண்டு இருந்தார்.

 

இதையடுத்து சம்பவம் நடந்த போது உடன் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த பெண்ணை தீவிரமாக தேடி வந்த நிலையில் அந்த பெண்ணை கண்டுபிடித்து அவரிடம் விசாரித்த போது போலீஸ்காரர் ரிஸ்வான் தாக்கியதன் காரணமாகவே ராஜ்குமார் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்து போனதாக தெரிவித்தார் அப்போதுதான் ரிஸ்வான் நாடகம் ஆடியது தெரியவந்தது.

 

இதையடுத்து பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தலைமை காவலர் ரிஸ்வானை போலீசார் கைது செய்தனர் ஜெய் பீம் படத்தில் குற்ற வழக்கை ஒப்புக்கொள்ளும்படி கதாநாயகனை போலீசார் அடித்து மிதிப்பதில் அவர் இறந்துபோவார் அவரது உடலை யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்தி விடுவார்கள் அதே பட பானியில் போலீஸ்காரர் அடித்து தாக்கியதில் கால் டாக்ஸி டிரைவர் இறந்து போன சம்பவத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்து நாடகம் ஆடிய போலீஸ்காரர் சிக்க உடன் இருந்த பெண் அளித்த வாக்குமூலத்தால் கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் கைது செய்யப்பட்ட ரிஸ்வான் இரவு நேரங்களில் மதுரவாயல் நெடுஞ்சாலை ஓரங்களில் திருநங்கைகள் மற்றும் காதல் ஜோடிகள் தனியாக நின்று கொண்டிருந்தால் அவர்களை மிரட்டி அவர்களிடமிருந்து பணம் வசூலித்து வந்ததாகவும் போலீசார் சிலர் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS