BREAKING NEWS

மதுரவாயல் பைபாசில் சாலையோரம் நின்றிருந்த லோடு வேன் மீது மொபெட் மோதல் மருத்துவ கல்லூரி மாணவி பலி

கொளத்தூரை சேர்ந்தவர் அரி கோபால் இவரது மகள் உமா மகேஸ்வரி(21), போரூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார் நேற்று மாலை கல்லூரி முடித்து விட்டு வீட்டிற்கு மொபெட்டில் சென்று கொண்டிருந்தார் தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு வேன் மீது எதிர்பாராதவிதமாக மொபெட் மோதியதில் தூக்கி வீசப்பட்டு உமா மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் இறந்து போன உமா மகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்துக்கு காரணமான வேன் டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS