BREAKING NEWS

மதுரையில் காலையில் நடந்த மீனாட்சி திருக்கல்யாணம் போல போடிநாயக்கனூர் அருகே உள்ள கிராமத்தில் மாலையில் நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்..

மதுரையில் காலையில் நடந்த மீனாட்சி திருக்கல்யாணம் போல போடிநாயக்கனூர் அருகே உள்ள கிராமத்தில் மாலையில் நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்..

 

கேரள செண்டை மேளம் கிராமத்து உறுமி மேளம் பாரம்பரிய கொட்டு மேளம் முழங்க தேவராட்டம் ஒயிலாட்டம் மானாட்டம் மயிலாட்டம் உடன் 108 தட்டுகளில் கல்யாண சீர்வரிசையுடன் இரண்டு கிலோமீட்டர் ஊர்வலமாக நடந்து வந்து நடைபெற்ற திருக்கல்யாணம்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று திருக்கல்யாணம் நடைபெறும் பொழுது தங்கள் திருமாங்கல்யம் மாற்றிக் கொண்டனர்* .

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அறிய அமைந்துள்ளது சில மலை கிராமம்.

இங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இன்று மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு சிறப்பு மீனாட்சி சுந்தரேசர் திருக்கல்யாணம் நடத்தப்பட்டது.

அருகில் உள்ள சில மரத்து பட்டி கிராமத்தில் இருந்து மாலை 5 மணி அளவில் வெள்ளி சீர்வரிசைகள் மாப்பிள்ளை பெண்ணுக்குரிய பட்டாடைகள் மற்றும் 108 வகை சீர்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

கேரள செண்டை மேளம் மற்றும் கேரள வண்ணக் காவடிகளுடன்
தமிழகத்தின் பாரம்பரியமான உருவி மேளத்திற்கு ஏற்றவாறு தேவராட்டம் ஆடி ஊர்வலமாக வந்தனர்.

மேலும் பொய்க்கால் குதிரை மயிலாட்டம் மாடு போல் ஆட்டம்.
பொய்க்கால் ஆட்டம் போன்ற பல்வேறு பாரம்பரிய கலைகளுடன் சிலம்பம் போன்ற நாட்டுப்புற கலைகளும் ஊர்வலம் ஆக வந்தனர்.

மேலும் ஊர்வலத்தில் மீனாட்சி அம்மன் போல் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

சுமார் இரண்டு கிலோமீட்டர் நடைபெற்ற இந்த ஊர்வலத்தைத் தொடர்ந்து தனியார் நிறுவனத்தில் அமைக்கப்பட்டு இருந்த அரங்கில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்த மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை நாயகி திருமால் விநாயகர் மற்றும் முருகன் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு விசேஷ வழிபாடுகள் பூஜைகள் நடைபெற்றது.

மேலும் மல்லிகை பந்தலின் கீழ் பெண் அழைப்பும் மாப்பிள்ளை அழைப்பும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து திருமண பாரம்பரிய முறைப்படி அம்மனுக்கு திருமண ஓலை வாசித்தல், தாரை வார்த்தல் பட்டாடை உடுத்துதல் மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று இறுதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தீபாராதனைகள் நடைபெற்றன.

சுமார் ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த திருக்கல்யாணத்தில் பங்கேற்றனர்.

பங்கேற்ற அனைவருக்கும் திருமாங்கல்யம் மஞ்சள் குங்குமம் வளையல்கள் வழங்கப்பட்டது.

மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் நடக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் தங்களின் பழைய தாலியை அகற்றி புதிய தாலி மாற்றிக் கொண்டனர்.

பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பான விருந்துவைபவம் நடைபெற்றது.

மதுரையில் காலையில் நடந்த மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் போல போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமத்தில் விமர்சையாக மாலையில் மீனாட்சியம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் நடைபெற்றது இதுவே முதல் முறையாகும்.

CATEGORIES
TAGS