மதுரையில் மூதாட்டியிடம் நகையை திருடிய முதியவர் கைது..

பாராளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் வெற்றி அடைந்ததற்கு ஆயிரம் ரூபாய் பணம் தருகிறார்கள் அதற்கு போட்டோ எடுக்க வேண்டும் என்று மூதாட்டியிடம் ஆசை வார்த்தை கூறி புகைப்படம் எடுக்க அழைத்து சென்றார்.
பின்னர் மூதாட்டியிடம் புகைப்படம் எடுப்பதற்கு முன்பு நகைகள் அணிந்து புகைப்படம் இருந்தால் ஆயிரம் ரூபாய் பணம் தர மாட்டார்கள் என்று மூதாட்டியிடம் கூறினார் அந்த முதியவர் கூறியதை நம்பி நகையை கழட்டி வைத்தார் மூதாட்டி.
பின்னர் புகைப்படம் எடுப்பது போல் மூதாட்டி அணிந்து இருந்த நகையை திருடி சென்று விட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக மதுரை திடிர் நகர் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
திடிர் நகர் AC சுகுமார், கிரைம் இன்ஸ்பெக்டர் நாக சாந்தி அவர்களின் உத்தரவின் பேரில் (ஸ்பெஷல் டீம்) அமலநாதன் சார்பு ஆய்வாளர் தலைமையில் தனிப் படை அமைத்து முரளி என்பவரை வலை வீசி தேடி வந்த நிலையில் . மூதாட்டியிடம் நகையை பறித்த முரளி என்பவரை காவல்துறையினர் கைது செய்தார்கள்.