மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதில் முறைகேடு.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதில் முறைகேடு என புகார் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார்.மதுரை கோரிப்பாளையம் பகுதியில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கீழ் அம்மன் ஏஜென்சி என்ற பெயரில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பல்கில் நேற்று முன்தினம் இரவு சிலர் தங்களது இருசக்கர வாகனங்களுக்கு பணியாளர்கள் பெட்ரோல் போடும் போது அதில் தொடர்ந்து முறைகேடு நடப்பதாகவும் ஒரு லிட்டர் பெட்ரோலில் 100 மில்லி அளவிற்கு பெட்ரோல் போடாமலே பெட்ரோல் போடப்பட்டதாக கணக்கு காட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து அந்த இளைஞர்கள் சிலர் நேரில் பெட்ரோல் பல்கிற்கு சென்று அங்கு குற்றச்சாட்டு வைத்த நிலையில் அங்குள்ள அளவீடு மானி மூலமாக பெட்ரோலை நிரப்ப கூறி நிரப்பிய போது ஒவ்வொரு லிட்டரிலும் 100 மில்லி அளவு குறைவாக எடுப்பது தெரியவந்தது
இதனை அவர்கள் வீடியோவாக பதிவு செய்தபோதே பெட்ரோல் பல்க் ஊழியர் உடனடியாக இயந்திரத்தில் மாற்றம் செய்தார். இதனையும் வீடியோ எடுத்த நபர்கள் அவரிடம் வாக்குவாதம் செய்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.இந்த பெட்ரோல் பல்க் மறைகேடு குறித்து மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் இளைஞர்கள் சிலர் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.