BREAKING NEWS

மதுரை போடி அகல ரயில் பாதையில் மதுரையில் இருந்து போடிக்கு 121 கீ. மீ வேகத்தில் நடத்தப்பட்ட ரயில் சோதனை ஓட்டத்தின் போது அடிபட்டு ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி மற்றும் 6 ஆடுகள் உயிரிழப்பு.

மதுரை போடி அகல ரயில் பாதையில் மதுரையில் இருந்து போடிக்கு 121 கீ. மீ வேகத்தில் நடத்தப்பட்ட ரயில் சோதனை ஓட்டத்தின் போது அடிபட்டு ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி மற்றும் 6 ஆடுகள் உயிரிழப்பு.

மதுரை – போடி அகல ரயில் பாதையில் தண்டவாளங்களில் ஏற்படும் அதிர்வுகள் அழுத்தங்களை கண்டறியும் வகையில் தானியங்கி தொழில் நுட்ப அமைப்புகள் கொண்ட அலைவு கண்காணிப்பு அமைப்பு (OMS) ரயில்
3 பெட்டிகளுடன் நேற்று மதியம் மதுரையில் இருந்து புறப்பட்டு 121 கிலோ மீட்டர் வேகத்தில் தேனி மாவட்டம் போடி வரை இயக்கப்பட்டு பின்னர் போடியில் இருந்து அதே வேகத்தில் மதுரைக்கு இயக்கப்பட்டது அப்போது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மனைவி மீனாட்சி 60 வயதான இவர் மலையடிவாரத்தில் ஆடு மேய்த்து விட்டு மீண்டும் ஆடுகளை வீட்டிற்கு அழைத்து சென்ற போது ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

வேகமாக ரயில் வரும்போது ஆடுகள் ரயில் தண்டவாளத்தில் நின்றதால் ஆடுகளை காப்பாற்றி அப்பகுதியில் இருந்து கடத்தி விட முயன்ற மீனாட்சியும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து6 ஆடுகளும் உயிரிழந்தது
இதையடுத்து தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே காவல்துறையினர் மீனாட்சியின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போடி -மதுரை அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டத்தின் போது ரயில்வே நிர்வாகம் முன்னெச்சரிக்கை கொடுத்தாலும் அது கிராம மக்களுக்கு தெரியாது
ரயில்வே சோதனை சாவடி உள்ள பகுதிகளில் மட்டும் சோதனை ஓட்டங்களின் போது ரயில்வே காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுவது உள்ளிட்ட தவறுகளால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் இனி வேகமான ரயில் சோதனை ஓட்டங்கள் நடைபெற்றால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தெரியும் வகையில் கிராமப் பகுதிகளில் தெரியப்படுத்த மாநில அரசும் மத்திய அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஏற்கனவே இது போன்ற வேக ரயில் சோதனை ஓட்டங்களின் போது தேனி மாவட்டத்தில் இரண்டு உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS