மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம், போராட்டக்காரர்கள் காவல்துறை இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளில் காவலர் ஒருவருக்கு கையில் ரத்த காயம் ஏற்பட்டதால் பரபரப்பு, காவல்துறை தாக்கியதால் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர் ஒருவருக்கு தலையில் காயம் பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றச்சாட்டு :-
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதிய நிவாரணம் நிதி உதவி அளிக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் தடுப்பு கட்டைகள் அமைத்து போராட்டக்காரர்கள் தபால் நிலையத்திற்கு உள்ளே செல்ல முடியாதவாறு தடுத்தனர். காவல்துறையினரை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் தடுப்பு கட்டைகளை தாண்டி தபால் நிலையம் உள்ளே செல்ல முயன்றனர் அப்போது இரண்டு தரப்புக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதில் பாதுகாப்பில் இருந்த காவலர் ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. இதேபோல் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர் ஒருவருக்கு தலையில் ரத்த காயம் ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.