மத்திய அரசு சட்டம் இயற்றலாமே தவிர அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது மாநில அரசாங்கங்களுக்கு உண்டு
மத்திய அரசு சட்டம் இயற்றலாமே தவிர அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது மாநில அரசாங்கங்களுக்கு உண்டு. முதலமைச்சர் தனக்கு உரிய அதிகாரத்தோடு சொல்லி இருக்கிறார். அண்ணாமலை அவருக்கு உரிய இடத்தின் தன்மையோடு பேசி இருக்கிறார் என சிஏ ஏ சட்டம் நடைமுறைப்படுத்துவது குறித்து தி.மு.க.மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி. சிவா கூறினார்.
தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரியில் நடந்த ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்த தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி. சிவா. செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்.
சிஏஏ சட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த வாய்ப்பு இல்லை என முதலமைச்சர் அறிவித்து உள்ளார். அண்ணாமலை மாநில அரசு நடைமுறைப்படுத்த வாய்ப்பு இல்லை என கூறி இருக்கிறாரே என்ற கேள்விக்கு
பதில் அளித்தவர்.
முதலமைச்சர் தனக்கு உரிய அதிகாரத்தோடு சொல்லி இருக்கிறார். அண்ணாமலை அவர்க்கு உரிய இடத்தின் தன்மையோடு பேசி இருக்கிறார்.
அரசியல் சட்டத்தின் அடிப்படையில் ஒன்றிய அரசுக்கு அதிகாரங்கள் உள்ளன.
மாநில அரசுக்கு அதிகாரங்கள் உள்ளன. பெரும்பாலானவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு தான் வந்து சேருகிறது.
மத்திய அரசு சட்டம் இயற்றலாமே தவிர அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது மாநில அரசாங்ககளுக்கு உண்டு.
உதாரணத்திற்கு இரு மொழி திட்டத்தை அறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் நடைமுறைப்படுத்துகிற போது நாடாளுமன்றம் இயற்றிய மொழி தொடர்பான சட்டத்தை, தீர்மானத்தை இந்த மன்றம் நிராகரிக்கிறது என்று சொல்லி தீர்மானம் நிறைவேற்றினார்.
அண்ணாமலை அவர் கருத்தை சொல்லிவிட்டார். நாங்கள் எங்கள் கருத்தை சொல்லி விட்டோம். என்றார்.