மத்திய பட்ஜெட்டில் தமிழகதிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத பாஜக அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டில் தமிழகதிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத பாஜக அரசு கண்டித்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் சுந்தர், மாநில மாணவரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த வாரம் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை பாராளுமன்றத்தில் மதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் ஆந்திரா ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ததுள்ளதும், தமிழக அரசை பாரதிய ஜனதா கட்சி நிராகரித்து உள்ளது எனவும் இதனை கண்டித்து தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நடைபெறும் என திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் சுந்தர் மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன் ஆகியோர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காவலன் கேட் பகுதியில் நடைபெற்றது.
இதில் மத்திய பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு நிதி ஒதுக்காததும் ஏற்கனவே வெள்ள நிவாரண நிதிக்கு சிறிதளவு நிதி உதவி அளித்து என தொடர்ந்து தமிழகத்தை பாஜக அரசு வஞ்சிக்கிறது என கண்டன கோஷங்களை எழுப்பி முழக்கங்கள் இட்டனர்.
இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் திமுக தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.