BREAKING NEWS

மத்தூர் பேருந்து நிலையத்தில் தொழிலாளர் தின விழா.

மத்தூர் பேருந்து நிலையத்தில் தொழிலாளர் தின விழா.

மத்தூர் பேருந்து நிலையத்தில் தொழிலாளர் தின விழா.கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் மத்தூர் பேருந்து நிலையத்தில் தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் முத்துராமலிங்கம் ஆலோசனையின் பேரில்.

கிருஷ்ணகிரி மாவட்ட சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் சமூக சேவகர் மஹபூப் பாஷா தலைமையில்,உழைக்கும் மக்களின் மேன்மையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டிக் கொண்டாடினர்.
இதில், மாவட்ட இணைத் தலைவர் இராஜா, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தங்கதுரை, மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் மகேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜான் மற்றும் மத்தூர் ஒன்றிய தொழிலாளர் அணி பாசறை தலைவர் கணேசன், ஷாஜகான், நிசார்,வேடியப்பன், மற்றும் பலர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS