மனிதநேயமிக்க ஈரோடு தாலுகா காவல் நிலைய தலைமை காவலர்.
ஈரோடு சென்னிமலை ரோடு கே.கே.நகர் ரயில்வே நுழைவாயிலில் திடீர் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை அறிந்த ஈரோடு தாலுகா காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். திடீரென நான்கு சக்கர வாகனம், இருசக்கர வாகனத்தில் லேசாக மோதியதில் நிலை தடுமாறி பள்ளி குழந்தையும் குழந்தையின் தாயரும் கீழே விழுந்தனர்.
அதனால் சிறிது காயம் ஏற்பட்ட நிலையில்,அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தாலுகா காவல் நிலைய தலைமை காவலர் ஜெகதீஸ்வரன் விரைந்து வந்து குழந்தையை தூக்கிக் கொண்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் அனுப்பி வைத்தார். அனுப்பி வைத்த உடனே போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.
இதனை அறிந்து வந்து தலைமை காவலர் சண்முகம் மற்றும் ஜெகதீஸ்வரன் போக்குவரத்தை சீர் செய்து பள்ளி வாகனங்களுக்கு இடையூறு ஏற்படாமல் விரைந்து அனுப்பி வைத்து,குழந்தைகளை சரியான நேரத்தில் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தனர். இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.