BREAKING NEWS

மன்னம்பந்தல் ஊராட்சியில் பால் பண்ணை பகுதியில் 114.45 கோடி மதிப்பீட்டில் புதிய ஆட்சியர் அலுவலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு.

மன்னம்பந்தல் ஊராட்சியில் பால் பண்ணை பகுதியில் 114.45 கோடி மதிப்பீட்டில் புதிய ஆட்சியர் அலுவலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு.

மயிலாடுதுறையில் பிரம்மாண்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டு இரண்டு தினங்களே ஆகியுள்ள நிலையில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் வாசலிலேயே காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே திறக்கப்பட்டு இரண்டு நாட்களே ஆகின்ற நிலையில் அலுவலகங்கள் அனைத்தும் அதிகாரிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டதால் புகார் மனு அளிக்க வந்த மனுதாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து தரங்கம்பாடி தாலுக்கா வடுகபூஞ்சை கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் தனது மகன் முதல் பிறந்த நாளன்று திருமண மண்டபத்தின் வாயிலில் பேனர் வைத்துளளார்.

இதுதொடர்பாக செம்பனார்கோவில் காவல்துறையினர் அகற்றும்படி தெரிவித்துள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ராஜ்குமார் மீது செம்பனார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் அவரை ரவுடி பட்டியலில் சேர்த்து காவல் நிலைய அதிகாரி இளங்கோவன் மற்றும் விஜயக்குமார் தொடர்ந்து தன் மீது பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த போது அங்கிருந்த காவலர் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே நீண்ட நேரம் பொதுமக்கள் பலர் புகார் அளிக்க வந்து வாசலிலேயே காத்திருந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லை என தெரியவந்த நிலையில் நீண்ட நேரம் காத்திருந்து பொதுமக்கள் அனைவரும் திரும்பி செல்லும் அவல நிலை ஏற்பட்டது.

இதேபோன்று பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனுக்கள் வாங்க அதிகாரிகள் இல்லாததால் தங்கள் மனுக்களுடன் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் திரும்பி சென்றனர்.

ஆட்சியர் அலுவலகம் திறந்து இரு தினங்களே ஆன நிலையில் பல்வேறு அலுவலகங்கள் அதிகாரிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டு மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

CATEGORIES
TAGS