மயிலாடுதுறையில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஆலயமான பரிமள ரங்கநாதர் ஆலய கும்பாபிஷேகம்
மயிலாடுதுறையில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஆலயமான பரிமள ரங்கநாதர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரியில் இருந்து புனித தீர்த்தம் யானை மேல் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திரு இந்தளூரில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பரிமள ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஆலயமான இது காவிரி கரையில் பள்ளிகொண்ட நிலையில் பெருமாள் அருள் பாலிக்கும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்சரங்க ஆலயங்களில் ஐந்தாவது அரங்கமாக போற்றப்படுகிறது.
ஆலயத்தின் கும்பாபிஷேகம் வரும் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஏழு கால யாகசாலை பூஜைகள் இன்று துவங்குகிறது.யாகசாலையில் வைத்து பூஜிக்கப்படும் புனித நீர் இன்று காவிரி ஆற்றில் இருந்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு வேதியர்கள் புடைசூழ யானை மேல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் விழா குழுவினர் ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.