மயிலாடுதுறையில் 2ம்நம்பர் புதுத்தெரு ஶ்ரீமகா காளியம்மன் ஆலயத்தின் வாயிலில் உள்ள உண்டியல் 6வது முறையாக உடைப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை இரண்டாம் நம்பர் புதுத்தெருவில் ஸ்ரீ மகா காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் வாயிலில் திறந்தவெளியில் ஒன்றரை அடி உயரத்தில் உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் பூட்டை நேற்று 26ம்தேதி அதிகாலை இரண்டு மர்’ம நபர்கள் உடைத்து உண்டியலில் இருந்த சுமார் 2 ஆயிரம் பணத்தை திருடிச்சென்றுள்ளனர். இரண்டு மர்ம நபர்கள் இரும்பு ராடால் உண்டியல் பூட்டை உடைத்து உண்டியலில் உள்ள பணம் மற்றும் காசுகளை வேட்டிக்குள் போட்டு திருடிச்செல்லும் வீடியோ கோயில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுவரை இந்த கோயிலின் உண்டியல் 6 முறை உடைக்கப்பட்டுள்ளது.
இரண்டுமுறை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 முறை திருட முயற்சித்தபோது பொதுமக்கள் வந்ததால் திருடர்கள் உண்டியல் பணத்தை கையில் கிடைத்தவரை அள்ளிகொண்டு தப்பியோடியுள்ளனர். இப்பகுதியில் உள்ள பயன்பாடற்ற ரயில்வே பாதையில் நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கஞ்சா மற்றும் மதுஅருந்துவதற்காக முகாமிடுவதால் இக்கோயில் வழியாக செல்லும் மர்ம நபர்களால் தொடர்ந்து கோயில் உண்’டியல் உடைக்கப்படுவதாகவும் போலீசார் இரவில் ரயில்வே பாதையில் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.