BREAKING NEWS

மயிலாடுதுறை அருகே கஞ்சா நகரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம்:-

மயிலாடுதுறை அருகே கஞ்சா நகரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம்:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 31ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி இன்று நான்காம் கால யாகசாலை பூஜை, பூரணாகுதி மகாதீபாரதனையுடன் நிறைவுற்றது.

தொடர்ந்து யாகசாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து விமான கும்பம் அடைந்தனர். அங்கு கோபுர கலசத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு மகாஅபிஷேகம் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

CATEGORIES
TAGS