BREAKING NEWS

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக தாக்கப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக தாக்கப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக தாக்கப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளை சேதப்படுத்தி அவர்களின் உறவினர் வீட்டை கொளுத்தி வீட்டில் உள்ள பொருட்களை களவாடி சென்றவர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரி கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார்:-

 

மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர் ஆலங்குடியில் கடந்த 17ஆம்தேதி வறண்டு கிடக்கும் பொது குளத்தில் கதிர், சூர்யா, வசந்த் ஆகியோர் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியபோது முன்விரோதம் காரணமாக அங்கு வந்த ஆலங்குடி வடக்கு தெருவை சேர்ந்த மகாலிங்கம் மகன் மோகன்(32) அவரது உறவினரான சாக்கியம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் ராம்குமார்(26) ஆகிய இருவரும் கிரிக்கெட் விளையாடிய வாலிபர்களிடம் தகராறு செய்த நிலையில் ஆத்திரமடைந்த கதிர் தன் கையில் வைத்திருந்த கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் ராம்குமார் பலத்த காயமடைந்து தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிந்து கதிர்(19), கதிரின் தந்தை ரஜினி(49), செல்வம்(48), செல்வத்தின் மகன்கள் சூர்யா(20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட மோகன் தரப்பினர் கலைவாணி என்பவர் வீட்டை தீவைத்து கொளுத்தியபோது, அங்கு ஏற்கெனவே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தீயை அணைத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட நபர்கள், மற்றும் அவர்களின் உறவினர்களின் வீடுகளை சூறையாடி வீட்டில் உள்ள சிலின்டர் உள்ளிட்ட பொருட்களையும் ஆடுகளையும் திருடி சென்றதாக குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தபோது புகாரை பெறாமல் காவல்நிலையத்தில் புகார் கொடுக்குமாறு கூறியதால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பலமணிநேரம் காத்திருந்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக ஆலங்குடியை சேர்ந்த கலியமூர்த்தி என்பவரை கைது செய்து போலீசார்’ தீவிர விசாரணை மேற்கொண்’டுள்ளனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து தங்கள் பொருட்களை மீட்டு தந்து பாதுகாப்பு வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி:
சோபியா

CATEGORIES
TAGS