BREAKING NEWS

மயிலாடுதுறை இலுப்பைத்தோப்பு  சின்ன  மாரியம்மன் கோயிலில் 27-‌ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறை இலுப்பைத்தோப்பு  சின்ன  மாரியம்மன் கோயிலில் 27-‌ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறை இலுப்பைத்தோப்பு  சின்ன  மாரியம்மன் கோயிலில் 27-‌ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். 16 அடி நீள அலகு குத்தியும் பக்தர்கள் பக்தர்கள் தீக்குழியில் நடந்து சென்றது காண்பவரை மெய்சிலிர்க்க வைத்தது:-

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற இலுப்பைத்தோப்பு  சின்ன மாரியம்மன் கோயிலின் சித்திரை திருவிழா மற்றும் 27-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 17 ஆம் தேதி பூச்சொரிதல், காப்பு கட்டுதல் உடன் தொடங்கியது.

தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வீதியுலா நடைபெற்றது. தீமிதி திருவிழாவினை இன்று சக்தி கரகம் மற்றும் விரதம் இருந்து காப்பு கட்டிய ஏராளமான பக்தர்கள், அலகு காவடி எடுத்த பக்தர்கள் மயிலாடுதுறை காவிரிக் கரையிலிருந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க வீதி உலாவாக கோயிலை வந்தடைந்தனர். வழியெங்கும் மக்கள் தங்கள் வீடுகளின் முன்பு சக்தி கரகத்திற்கு தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.

தொடர்ந்து கோயிலின் முன்பு அமைக்கப்பட்ட தீக்குழியில் சக்தி கரகம் இறங்கியதை அடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண் பக்தர்கள் இறங்கி நடந்து சென்றும் தீமிதித்து தங்கள் நேர்த்தி கடனை பூர்த்தி செய்தனர். மேலும் 16 அடி நீள அலகு குத்தியும் பக்தர்களும் தீக்குழியில் நடந்து சென்று தீ மிதித்தது காண்பவரை மெய்சிலிர்க்க வைத்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் விண்ணை முட்டும் கண்கவர் வாணவேடிக்கை பக்தர்களை பரவசபடுத்தியது. முன்னதாக, தீமிதிக்கும் போது கையில் வைத்திருந்த தீச்சட்டியை தீக்குழியில் தவறவிட்ட ஒருவர் மீண்டும் தீயில் நின்றவரே அதை எடுக்க முயற்சித்தபோது அருகில் இருந்தவர்கள் அவரை வலுக்கட்டமாக அப்புறப்படுத்தினர்.

Share this…

CATEGORIES
TAGS