மயிலாடுதுறை சேந்தங்குடி முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி வடக்கு வீதியில் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தின் சித்திரை மாத தீமிதி திருவிழா நடைபெற்றது இதனை முன்னிட்டு காவிரி கரையில் இருந்து மேளதாளங்கள் முழங்க சக்தி கரகம் முன்னே செல்ல அலகு காவடி அலங்கார காவடி ஆகியவற்றை பக்தர்கள் ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்து வந்தனர் .
ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர்.20க்கும் மேற்பட்ட திருநங்கைகளும் தீமிதித்து வழிபாடு செய்தனர்.இந்த ஆலயத்தின் அர்ச்சகராக செயல்படும் திருநங்கை பக்தர்களுக்கு நெற்றியில் விபூதி குங்கும பிரசாதம் இட்டு ஆசிர்வாதம் வழங்கினார்.