மயிலாடுதுறை திருஇந்தளூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பரிமள ரங்கநாதர் ஆலய மண்டலா அபிஷேக பூர்த்தியை முன்னிட்டு 1008 கலசங்களில் புனித நீர் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை திரளான பக்தர்கள் பங்கேற்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பரிமள ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 வைணவ ஆலயங்களில் 22 வது ஆலயமாக கூறப்படும் இந்த ஆலயம் காவிரி கரையில் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள் பாலிக்கும் ஸ்ரீரங்கப்பட்டணம் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களில் ஐந்தாவது அரங்கம் எனப்படும் பரிமளரங்கமாக போற்றப்படுகிறது.
இந்த ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது அதன் மண்டல அபிஷேக பூர்த்தி முன்னிட்டு 1008 கலச அபிஷேகம் நடைபெற்றது இதனை முன்னிட்டு உற்சவர் சுகந்தவன நாதர் சுகந்தவன நாயகி உடன் பரமபத மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
தொடர்ந்து சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு 1008 கலசங்களில் வைக்கப்பட்ட புனித நீர் கொண்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது ராமானுஜர் பக்த கைங்கரிய சபா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.