BREAKING NEWS

மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு.

மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு.

மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் சாமி தரிசனம் செய்து பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு. மயிலாடுதுறை – காரைக்கால் இடையே மீண்டும் இரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உட்புகுதலை தடுக்க தடுப்பணை அமைக்கப்படும். தொகுதி மக்களுக்கு தேவையான திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்து தீவிர பரப்புரை.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் சாமி தரிசனம் செய்து பரப்புரை மேற்கொண்டார்.

கோவில் நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சாமி தரிசனம் செய்து பரப்புரையை தொடங்கிய வேட்பாளர் ம.க.ஸ்டாலின் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்கடையூர், தில்லையாடி, அனந்தமங்கலம், காழியப்ப நல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Share this…

CATEGORIES
TAGS