மயிலாடுதுறை புதிய பேருந்து (நகர பூங்கா) நிலையம் அருகில் உயர் மின் அமுத்த மின்கம்பிகள் கொண்ட இரும்பு கம்பம் ஒடிந்து விழுந்தது.
மயிலாடுதுறை நகரின் முக்கிய பகுதிகளில் பல மணி நேரம் மின்தடை, போக்குவரத்து பாதிப்பு :-
மயிலாடுதுறை மாவட்டம், பியர்லஸ் தியேட்டர் அருகில் (புதிய பேருந்து நிலைய வாயியில் ர- திரையரங்கு, வணிக வளாகம் என மின் இணைப்பு தரும், உயர் மின் அமுத்த கம்பிகள் பொருத்தபட்ட இரும்பு மின் தாங்கி தூன் (post) – செறித்து போய் ஒடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டத்தை தடுக்க காவல் துறையினர் சாலை தடுப்புகளை ஏற்படுத்தி – பேருந்து நிலையத்திலிருந்து, தரங்கம்பாடி நோக்கி செல்லும் பேருந்துகளும், திருவாரூர் மார்க்கதில் செல்லும் பேருந்துகளும் தடைபட்டதால் பயனிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகி தவித்து வருகின்றனர்.
மேலும் முக்கிய வழித்தடத்தில் மின்கம்பம் என்பதால் மின் சப்ளையை உடனடியாக அதிகாரிகள் துண்டித்தனர் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது ஆனால் மீண்டும் அதனை சரி செய்ய நீண்ட நேரம் ஆனதால் பல மணி நேரம் மயிலாடுதுறையின் முக்கிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது கோடை காலம் என்பதால் மின்சாரம் இன்றி பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளானகினர். ஏற்கனவே மின்கம்பம் ஒடிந்துவிடும் நிலையில் இருந்த நிலையில் அதிகாரிகள் அதனை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இந்த சம்பவம் நேரிட்டுள்ளதாக தெரிகிறது.