மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் குத்தாலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு

மேளதாளம் முழங்க இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மலர்தூவி வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் குத்தாலம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பருத்திக்குடி சக்தி பிடாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பரப்புரையை தொடங்கிய வேட்பாளர் ம.க.ஸ்டாலினுக்கு மேளதாளம் முழங்க, இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கோனேரிராஜபுரம், கோடிமங்கலம், பாலையூர், நக்கம்பாடி உள்ளிட்ட குத்தாலம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரித்தார்.
வாக்கு கேட்டு சென்ற பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பெண்கள் பொன்னாடை அணிவித்து, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.