BREAKING NEWS

மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் 497 மதிப்பெண்களைப் பெற்று மாநில அளவில் தேர்ச்சி பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் 497 மதிப்பெண்களைப் பெற்று மாநில அளவில் தேர்ச்சி பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் 497 மதிப்பெண்களைப் பெற்று மாநில அளவில் தேர்ச்சி பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தனர். மாவட்டத்தில் வழக்கம்போல் மாணவிகளே அதிக மதிப்பெண் பெற்று சாதனை,

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளன ர். மயிலாடுதுறை மாவட்ட த்தை பொறுத்தவரை 90.48 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் இந்த தேர்ச்சி விகிதத்தில் பெண்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் மாநில அளவிலான மூன்றாவது மதிப்பெண்ணான 497 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து நடப்பாண்டு 5744 மாணவர்கள், மாணவிகள் 5805 என 11,549 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், 4975 மாணவர்களும், 5474 மாணவிகள் என மொத்தம் 10,449 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 86.61 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 94.30 ஆகும். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 90.48% ஆகும். இது கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 86.31 சதவீதம் பெற்ற நிலையில் இந்தாண்டு 90.48 சதவீதம் எடுத்து 4.17 சதவீதம் அதிகம் ஆகும்.

மாநில அளவில் 27 வது இடம் பெற்றுள்ளது. மேலும் 9 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கிராமப்புற பகுதி பலியான ஸ்ரீகண்டபுரம் குட்லக் பள்ளி மாணவி , மயிலாடுதுறை மேகனா பள்ளி மாணவி, வைத்தீஸ்வரன் கோயில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ முத்தையா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி ஒருவரும், உள்ளிட்ட ஏழு பள்ளிகளை சேர்ந்த மயிலாடுதுறை மாணவிகள் 497 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் பொறுப்பாளர்கள் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்து இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS