மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் குறுவை சாகுபடிக்கான நடவு பணிகள் தீவிரம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலத்தடி நீரை பயன்படுத்தி மின் மோட்டார்கள் மூலம் ஆண்டுதோறும் 94 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு சாகுபடி பணிகளை விவசாயிகள் தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். நிலத்திற்கு நீர் பாய்ச்சுதல் இயந்திரங்கள் மூலம் சமன் செய்தல் உழவு செய்தல் நாற்றங்கால் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது இதனால் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதுவரை 12 ஆயிரம் ஏக்கரில் நடவு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 1600 ஏக்கரில் நாற்றங்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் பலகட்ட போராட்டத்திற்கு பிறகு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நிலையில், தங்கு தடை இன்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் இன் நிலையில் குறுவை சாகுபடிக்காக 1250 மெட்ரிக் டன் யூரியா பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் ரயில் வேகன்கள் மூலம் மயிலாடுதுறைக்கு கொண்டுவரப்பட்டு உரக்கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.