BREAKING NEWS

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ஒ என் ஜி சி சார்பில் எட்டு லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய பேட்டரி கார் சேவை துவக்கி வைக்கப்பட்டது

மயிலாடுதுறை ரயில் நிலையம் மெயின் லைன் எனப்படும் திருச்சி தஞ்சை கும்பகோணம் வழியே சென்னை செல்லும் முக்கிய வழித்தடமாகும்.இங்கு ஐந்து பிளாட்பாரங்கள் உள்ள நிலையில், நகரும் படிக்கட்டு மின் தூக்கி ஆகிய சேவைகள் இதுவரை அமைக்கப்படவில்லை இதன் காரணமாக பயணிகள் ஐந்தாவது பிளாட் வாரம் வரை செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் பொதுமக்கள் வசதிக்காக ஓஎன்ஜிசி சார்பில் 8 லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய பேட்டரி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பராமரிப்பு மயிலாடுதுறை அரிமா சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது ஓஎன்ஜிசி நிறுவனத்தின்,மேலாளர் மாறன் பேட்டரி கார் சேவையை துவக்கி வைத்தார்.

CATEGORIES
TAGS