BREAKING NEWS

மயில்பாறை கிராமத்தில் எழுந்து அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் கொடியேற்று விழா

மயில்பாறை கிராமத்தில் எழுந்து அருள்பாலிக்கும் அருள்மிகு  ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் கொடியேற்று விழா

காவேரிப்பட்டினம் அருகே கூரம்பட்டி மயில்பாறை கிராமத்தில் எழுந்து அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் கொடியேற்று விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த கூரம்பட்டி மயில் பாறை கிராமத்தில் எழுந்து அருள் பாலிக்கும் 34 ஆம் ஆண்டு அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 28 ஆம் தேதி இரவு 11மணிக்கு கங்கையில் நீராட்டி சுவாமி எடுத்து செல்லுதல் காவேரிப்பட்டினம் தென்பெண்ணை ஆற்றில் கங்கை பூஜை செய்தல் காலை 6 மணிக்கு அன்னதானம், காலை 5:00 மணிக்கு மேளக்கச்சேரி மதியம் 2:00 மணிக்கு நையாண்டி மேளக்கச்சேரி நடைபெறும் 29-ஆம் தேதி பிற்பகல் 1மணிக்கு போத்துராஜ பக்தர்களுக்கு அலகு போடுதல் காவடி சலாக் பறக்கும் சலாக் போடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும். மாலை 6:00 மணிக்கு இளைய நிலா சினி நடன நாட்டியாலயா நிகழ்ச்சி வானவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும்.30-ஆம் தேதி இடும்பன் பூஜை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் விழா குழு தலைவர்கள் தலைவர் சி.திருப்பதி, பூசாரி ஆர். சின்னத்தம்பி, தர்மகர்த்தா கோவிந்தசாமி மற்றும் கூரம்பட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தன

CATEGORIES
TAGS