மருங்கூர் கிராமத்தில் தீமிதி திருவிழா
அரியலூர் மாவட்டம், செந்துறைஅருகே மருங்கூர் உள்ள திரௌபதி அம்மன், கோவிலில் தீமிதி திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்பு கட்டி திருவிழா தொடங்கியது திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், திரௌபதி அம்மன், தருமர், பீமன், அர்ஜுனர், நகுலன், சகாதேவன், கிருஷ்ணர், அரவான் ஆகிய தெய்வங்களுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, திருவீதி உலாவும் நடைபெற்றது. 1.10.2023 வெள்ளிக்கிழமை
கிழமை திரௌபதி அம்மன், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து பூங்கரகம், அக்னி கரகம் ஏந்திய பக்தர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். முக்கிய வீதியுலா முடிந்து கோவில் வளாகத்தை நெருங்கியதும் அக்னி குண்டத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டது. இதையடுத்து அக்னி கரகம் ஏந்தியவாறு தீ மிதித்து தொடங்கி.வைத்த பின்னர், பூங்கரகம் உள்ளிட்ட கரகங்கள் ஏந்திய பக்தர்கள் அக்னிகுண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர்.
தீமிதி திருவிழாவில் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள்செந்துறை அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து ஏரளானமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.