BREAKING NEWS

மருது சேனை நிறுவன தலைவர் கொலை முயற்சி – குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து போராட்டம்

அருகே மருது சேனை நிறுவன தலைவரை பெட்ரோல் குண்டு வீசியும்., துப்பாக்கியால் சுட்டு கொலை முயற்சி சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்தும் வழக்கு பதிவு செய்யவில்லை என கூறி கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் – ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு.

மருது சேனை அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆதிநாராயணனை இன்று மதியம் காரில் வந்த கும்பல் ஒன்று அவரது சொந்த ஊரான மையிட்டான்பட்டி விலக்கு அருகே கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தி பெட்ரோல் குண்டு வீசியும்., துப்பாக்கியால் சுட்டும் நடைபெற்ற கொலை முயற்சி சம்பவத்தில் ஆதிநாராயணன் உயிர் தப்பினார்.

இந்நிலையில் தனது அமைப்பின் பொருளாளர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஞானசேகர் ஆதரவாளர்கள் முன்விரோதம் காரணமாகவும்., போலீசார் துணையோடு கஞ்சா வியாபாரம் தலைவிரித்து ஆடுகிறது என டிஎஸ்பி அலுவலகத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு புகார் அளித்த நிலையில்., அந்த விவகாரம் தொடர்பாகவும், கொலை செய்யும் நோக்கில் வந்ததாகவும், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கள்ளிக்குடி காவல் நிலையத்தில் ஆதிநாராயணன் புகார் அளித்திருந்தார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தற்போது வரை வழக்கு பதிவு செய்யாமல் குற்றவாளிகளை கைது செய்யாமலும்., மெத்தனம் காட்டுவதாக காவல்துறையை கண்டித்து தனது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கப்பலூர் சுங்கச்சாவடி வந்த ஆதிநாராயணன் பத்துக்கும் மேற்பட்ட கார்களை சுங்கச்சாவடியில் பக்கவாட்டில் மறைத்து நிறுத்தி தடுப்புகளை ஏற்படுத்தி குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் மதுரை திருமங்கலம் வழியாக கன்னியாகுமரி செல்லும் நான்கு வழிச்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Share this…

CATEGORIES
TAGS