BREAKING NEWS

மருதூர் கீழப்பட்டி கிராமத்தில் எழுந்தருவி அருள்பாலித்துவரும் அருள்மிகு பழனியாண்டவர் அருள்மிகு கொங்கண சித்தர் பீடத்திற்கு யாக வேள்வி பூஜை நடைபெற்றது

மருதூர் கீழப்பட்டி கிராமத்தில் எழுந்தருவி அருள்பாலித்துவரும் அருள்மிகு பழனியாண்டவர் அருள்மிகு கொங்கண சித்தர் பீடத்திற்கு யாக வேள்வி பூஜை நடைபெற்றது

 

அரியலூர் மாவட்டம் மருதூர் கீழப்பட்டி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பழனியாண்டவர் அருள்மிகு ஸ்ரீ கொங்கண சித்தர் பீடத்திற்கு யாக குண்டத்தில் வேள்வி எழுப்பி பூஜை நடைபெற்றது.

சித்திரை மாதம் உத்திராட நட்சத்திரத்தில் கொங்கணர் பிறந்தார் என்று அகத்தியர் 12,000 போகர் ஏழாயிரம் நூல்கள் கூறுகின்றன கொங்கணரின் குருமார் போகர் ஆவார் ஸ்ரீ பழனி ஆண்டவரின் நவபாஷாண சிலையை அமைத்ததில் கொங்கணருக்கு முக்கிய பங்கு உண்டு இரும்பையும் செம்பையும் பொண்ணாக்கும் சக்தி படைத்தவர் கொங்கணர் ஆவார் திருமலையில் எழுந்தருளி இருக்கும் திருவேங்கடநாதனை தரிசிப்பதும் கொங்கண சித்தரை தரிசிப்பதும் ஒன்றே ஆகும்

மருதூர் கிராமத்தில் வசித்து வந்த பழனியாண்டி அம்மையார் காட்டிலிருந்து விறகு கட்டு சுமந்து வந்த போது மயங்கி கீழே விழுந்த போது அம்மையார் முருகா என்று விலவியபோது வயோதிகர் உருவில் வந்து முருகப்பெருமான் தண்ணீர் கொடுத்து அம்மையாருக்கு தாகம் தீர்த்தார் பின்னர் நீங்கள் என்னை தொடர்ந்து நினைத்து பூஜித்து வந்தால் சித்தியாகும் என்று முருகப்பெருமான் சொல்லி மறைந்தார் என்று கூறப்படுகிறது அதன்பின் சித்து மூலம் பழனியாண்டி அம்மையார் சித்து மூலம் பல அற்புதங்களை செய்து வருகின்றார் இங்கு தங்கி இருந்து தவம் இருந்ததாகவும் பல அற்புதங்கள் நிகழ்ந்த இடம் என்பதால் 12 வருடங்களுக்கு முன்பு தர்மத்தி வகையறாக்கள் கொங்கணருக்கு ஆலயம் அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர் .

அதன் தொடர்ச்சியாக கொங்கணருக்கு நடக்கும் முதல் யாக வேள்வி பூஜை ஆகும் இதில் சங்கர் சிவாச்சாரியார் மந்திரங்கள் ஓத யாக வேள்வி பூஜை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மகா தீப ஆராதனை நடைபெற்றது இதில் பெருந்திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு கொங்கணரின் இறை அருள் பெற்று சென்றனர்.

Share this…

CATEGORIES
TAGS