மருத்துவ ஆய்வு கூட நிபுணர் தின விழா தஞ்சை அண்ணா நகரில் சங்க கொடியேற்றி கொண்டாடப்பட்டது
மருத்துவ ஆய்வு கூட நிபுணர் தின விழா தஞ்சை அண்ணா நகரில் சங்க கொடியேற்றி கொண்டாடப்பட்டது சங்கத் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் தர்மராஜ் முன்னிலையில் வீர சிவராமன் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் .
இந்த நிகழ்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மருத்துவக் கழிவுகள் அகற்றும் கட்டணத்தை தமிழகம் முழுவதும் அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். ,மேலும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மருத்துவக் கழிவுகளை அகற்றுவதை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
அரசால் அங்கீகாரம் பெறப்படாத கல்வி நிலையங்களில் பயின்று பல ஆண்டுகளாக பணி புரிகின்ற ஆய்வக நுட்புனர்களுக்கு கவுன்சிலில் பதிவு செய்யும் வகையில் விதிகள் அமைக்கப்பட வேண்டும்.
ஆய்வகங்கள் செயல்படுவதற்கான இடம் தொடர்பான வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளது. சிறிய பரிசோதனை பாதுகாக்கும் பொருட்டு குறைந்தபட்ச அளவாக 100 அடி இடம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட வேண்டும். என்பன பத்துக்கு மேற்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
மேற்கண்ட கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இந்த நிகழ்வில் கோவிந்தராஜ், விக்னேஷ்,வசந்தகுமார், முகமது ரபிக்,நெல்சன், கருணாகரன், கலா, கோகிலா, , மாதவி,மற்றும் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.