மருத்துவ உதவிக்காக களம் இறங்கிய நண்பர்கள்
ஈரோடு அக்ரஹாரம் அன்னை சத்யா நகரில் வசிக்கும் செந்தில் என்பவருக்கு இரண்டு கிட்னியும் செயல் இழந்ததன் காரணமாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மருத்துவ உதவிக்காக ஆறு லட்சம் மருத்துவ உதவிக்காக தேவைப்படுகிறது என சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ ஏராளமானவரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து
ஸ்ரீ முருகப்பெருமான் அன்னதானம் சமூக சேவகர்கள் நலச்சங்கம் மற்றும் கருங்கல்பாளையம் நண்பர்கள் ஆகியோர்கள் இணைந்து, செந்தில் என்பவரின் குடும்பத்தாரிடம் ரூபாய் 27 ஆயிரம் பண உதவி கொடுத்து மருத்துவ உதவிக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறும் மேலும் ஏதாவது உதவி தேவைப்பட்டால் அழையுங்கள் என்றும் மேலும் தங்களின் குழந்தைகளின் படிப்பிற்காக தேவையான நோட்டு புத்தகங்கள் தேவை என்றாலும் உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
உதவித்தொகையை பெற்றுக் கொண்ட குடும்பத்தார் கண்ணீர் மல்க நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தனர். நண்பர்கள் இது போன்று பல்வேறு நபர்களுக்கு மருத்துவ உதவியை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.