BREAKING NEWS

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கும் டி.ராஜேந்தரை, நடிகர் கமல்ஹாசன் சந்தித்து நலம் விசாரித்தார்.

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கும் டி.ராஜேந்தரை, நடிகர் கமல்ஹாசன் சந்தித்து நலம் விசாரித்தார்.

நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், வயிற்றுப் பகுதியில் ரத்தக் கசிவும் ஏற்பட்டதைக் கண்டனர். அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று டி.ராஜேந்தரை சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்நிலையில் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள ரத்தக் கசிவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால், அவருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். விசா நடைமுறைகள் தாமதமானதால் உடனடியாக அங்கு செல்ல முடியவில்லை. இப்போது விசா கிடைத்ததை அடுத்து, இன்று இரவு செல்கின்றனர். துபாய் வழியாக அமெரிக்கா செல்லும் டி.ராஜேந்தருடன் அவர் குடும்பத்தினரும் செல்கின்றனர்.

விமான நிலையத்தில் இன்று மாலை 6 மணியளவில், டி.ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்.

இதற்கிடையே இன்று அமெரிக்கா செல்லும் டி.ராஜேந்தரை நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குறளரசன் உடன் இருந்தார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )